Sunday, September 09, 2012

108ன் சிறப்பு தெரியுமா?


படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108  திகழ்கிறது என்கிறார்கள். பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம், அதற்கு இதோ ஒரு சில உதாரணங்கள்.
* வேதத்தில் 108 உபநிடதங்கள்.
* பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய ÷க்ஷத்திரங்கள் 108.

* நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108
* அர்ச்சனையில் 108 நாமங்கள்
* அரசமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.
* சூரியனின் விட்டம் பூமியில் விட்டத்தைப் போல 108 மடங்கு.
ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே எண்ணிக்கையில் பல விஷயங்களும் அமைகின்றன.
* தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.
* திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108
* ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
* மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்தமதம் கூறுகிறது.
* முக்திநாத் ÷க்ஷத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.
* உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள்.
* உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.
* குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.
* மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
* சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள்.
* 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.
"1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் "0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும், 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.
ஜபமாலையில் 108 மணிகள் ஏன்?
ஜபமாலையில் 108 அல்லது 54 அல்லது 27 மணிகள் கொண்ட மாலைகளும் உண்டு. இந்த எண்ணிக்கைகளைக் கூட்டினால் ஒன்பது வருகிறது. (1+0+8: 5+4 : 2+7).
ஜபம் செய்யும் போது எண்ணிக்கையை விரல்களினாலோ அல்லது ஜபமாலையினாலே செய்யலாம். 10,12,28,32 அல்லது 108 முறை ஜபம் செய்யலாம். இதில் 108 என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனிதன் ஒரு நாளில் 21,600 முறை மூச்சு விடுகிறான். தூக்கத்திற்காகவும், உடலைப் பேணுவதற்கான காரியங்களுக்காகவும் அதில் பாதியைக் கழித்தால் உணர்வுடன் வேலை செய்யும் போது10800 முறை மூச்சு விடுகிறான். 108 என்பது இதையே உணர்த்துகிறது. ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு தடவை மந்திரம் உச்சரிக்கப்பட வேண்டும் என்ற லட்சியத்தை நினைவுபடுத்தவே இந்த 108 எண்ணிக்கை வைக்கப்பட்டுள்ளது.
“அஷ்டோத்ர சதா நாமவளி” என்பவை இந்து கடவுளர்களின் ஸ்தோத்திரங்களின் பெயர்கள் 108.

முனிவர்களும் ஞானிகளும் தங்கள் உள்ளுணர்வின் மூலமே பல தகவல்களை தெரிவித்திருக்கிறார்கள் என்பது மிகுந்த ஆச்சர்யமானது.
நம் உடலில் 108 சூட்சுமங்கள் (நெர்வ் பாய்ன்ட்ஸ்) இருக்கின்றன
துணை உணர்வு மற்றும் எண்ணங்கள் ஒவ்வொரு மனித உடலின் சிக்கலான கூறுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. “குண்டலினி” என்பதன் அடிப்படை. இந்த மர்ம நாடி 9 முக்கிய உடல் பாகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
ஹிந்து இதிகாசங்களில் திருப்பாற்கடல் இது “மில்கி வே”தான் இதன் ஒருபுரம் 54 தேவர்களும் மறுபுறம் 54 அசுரர்களும் ஒரு பெரிய பாம்பிணை கயிராகவும் மேரு மலையை மத்தாகவும் கொண்டு அமுதம் பெற வேண்டி கடைந்ததாக சொல்லப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஒப்புமைப்படுத்த விளக்கப்பட்டது. இரண்டு 54 ன் கூட்டு தொகை 108.
108 திவ்விய தேசங்கள் மகா விஷ்ணுவிற்கு உள்ளது.
உத்திராட்ச மற்றும் துளசி மணி மாலை, கிருத்துவர்களின் புனிதஜெப மாலை இவைகளில் மணிகளின் எண்ணிக்கை 108.
உபநிஷ்த்துகள் 108. புத்தர் கோயில்களில் கற்பகிரஹகத்திற்கு செல்ல 108 படிகளை கடக்க வேண்டும். புத்த விகாரங்களில் 108 சிறிய புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தாண்டிற்கு 108 முறை மணிகளை ஒலிக்கிறார்கள்.


இஸ்லாத்தில் 108 என்பது கடவுளை குறிக்கும்.

108 உணர்சிகளில் 36 உணர்ச்சிகள் நிகழ்காலத்திலும், 36 உணர்ச்சிகள் கடந்த காலத்திலும், 36 உணர்ச்சிகள் எதிர் காலத்திலும் இருக்கிறதாம்.
ஜோதிடத்தில் நிலவுக்கு வெள்ளி ஒப்பீடு செய்யப்படுகிறது இதன் அணு நிறை 108.


நிலவின் சுற்றுப் பாதையில் 27 நட்சத்திர மண்டலங்களோடு தொடர்பு படுத்தப்படுகிறது. நிலவு பூமியை ஒரு சுற்று முடிக்க 27 – 1/3 நாட்கள், ஒரு நாளுக்கு ஒரு நட்சத்திர தொகுப்பில் சஞ்சரிக்கும்.
ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதம் என்றால் 27 நட்சத்திரத்திற்கு மொத்தம் 108 நட்சத்திர பாதங்கள் என வகைப்படுத்தப்பட்டது இந்திய ஜோதிடம்.
நிலவுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு = நிலவின் விட்டம் போல் 108 மடங்கு.
சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு = பூமியின் விட்டம் போல் 108 மடங்கு
சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தில் 108 மடங்கு.

[சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள வரையறுக்கப்பட்ட தொலைவு
149,597,870,691 kms இதை பூமியின் விட்டத்தால் அதாவது 1,392,000 Kms ஆல் வகுத்தால் கிடைப்பது 107.46973469181034482758620689654. ]
இது போல் பல கிரகங்கள், நட்சத்திரங்கள் உடுமண்டலங்கள், அனைத்தும் இந்த கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது இதை நான் சொல்ல வில்லை “கார்ல் சகன்” என்ற அறிஞர் சொல்லியிருக்கிறார்.
இன்னும்….
ஒரு நாளுக்கு மனிதனின் சுவாசங்களின் எண்ணிக்கை 21600 இதில் 10800 சூரிய சக்தி, 10800 நிலவின் சக்தியாகவும் சொல்லப்படுகிறது. தியானமுறையில் ப்ரணாயாமம் கற்பிக்கப்படுகிறது இதில் மூச்சு காற்றை 108 சுவாசங்கள் என்பது ஒரு நாளுக்கு தான். [10800 divided by 100 ]
Post a Comment